தேசியம்
செய்திகள்

Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் மின்சாரம் இல்லாமல் ஆயிரக் கணக்கானவர்கள்

Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

தெற்கு Ontarioவின் Niagara பிராந்தியத்தில் அவசரகால நிலை தொடர்கிறது.

அங்கு மின்சாரத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் இணைப்புகளை வழக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (25) நண்பகல் நிலவரப்படி, Ontarioவில் 59,000 பேர் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக Hydro One தெரிவித்துள்ளது.

தெற்கு Ontarioவின் பெரும்பகுதி, தொடர்ந்தும் சுற்றுச்சூழல் கனடாவின் வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளது.

Quebecகில் 131,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

New Brunswick மாகாணத்தில் 6,755 பேர் வரை மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

Related posts

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் விரைவில் நியமனம்

Lankathas Pathmanathan

G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளின் பங்கேற்பை எதிர்த்து கனடிய துணைப் பிரதமர் வெளிநடப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment