2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான Nobel பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நவநீதம் “நவி” பிள்ளைக்கு கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Nobel பரிசு வென்றுள்ள நவநீதம் பிள்ளைக்கு கனடிய தமிழ் சமூகத்தின் நெகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தனது பாராட்டில் கூறினார்.
Nobel பரிசு அறிவித்தல் வெள்ளிக்கிழமை (09) வெளியான நிலையில் ஹரி ஆனந்தசங்கரியின் வாழ்த்துகள் அடங்கிய சமூக ஊடக பதிவும் வெளியானது.
நீதிக்கும், மனித உரிமைகளுக்கும் தமிழ் வம்சாவளி பெண்மணி நவநீதம் பிள்ளை அணையா விளக்கை ஏற்றியவர் என ஹரி அனந்தசங்கரியின் பாராட்டு குறிப்பிடுகிறது.
மனித உரிமை வட்டாரங்களில் இந்த உயரிய அங்கீகாரம், சர்வதேச நீதிக்கான வெற்றியாக மட்டுமின்றி, கனடாவிற்கு அவர் மேற்கொண்ட வரலாற்றுப் பயணங்களின் போது கனடாவில் உள்ள கல்வி, கலை, இளைய தலைமுறையினர் மத்தியில் அவர் விதைத்த ஆழமான தாக்கங்களின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என அமைச்சரின் வாழ்த்து குறிப்பு கூறுகிறது.
