தேசியம்
செய்திகள்

மனநலம் பாதித்தவர்களுக்கு கருணைக் கொலை சலுகை இல்லை: நீதி அமைச்சர் Sean Fraser

மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு, மருத்துவ உதவியுடன் கூடிய கருணைக் கொலை (MAID – Medical Assistance in Dying) சலுகையை வழங்குவதில்லை என திட்டவட்டமாக முடிவு செய்யப்படடுள்ளது.

இதற்கான தற்காலிகத் தடையை காலவரையறையின்றி நீட்டிக்க மத்திய அரசாங்கம் புதிய அவசர சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது.

மருத்துவச் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அதிரடி மாற்றங்களை மத்திய நீதி அமைச்சர் Sean Fraser அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மருத்துவ கருணைக் கொலை சட்டத் திருத்தங்களின்படி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சலுகை பலமுறை நீட்டிக்கப்பட்டு இறுதியாக வரும் March 2027-ல் அமுலுக்கு வரவிருந்தது.

இந்த நிலையில் தற்போது கொண்டு வரப்படும் புதிய இலையுதிர்கால சட்டமூலம்  மூலம் இச்சலுகை முழுமையாக முடக்கப்படுகிறது.

Related posts

Ontarioவில் monkeypox பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியது

Lankathas Pathmanathan

Nova Scotia பாடசாலைகளில் முக கவசங்கள் கட்டாயமாகின்றன!

Gaya Raja

Latviaவிற்கு மேலும் துருப்புக்களை அனுப்ப கனடா உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment