தேசியம்
செய்திகள்

IIHF உலக Hockey அமைப்பில் கனடாவுக்கு இடம் இல்லை?

IIHF உலக Hockey அமைப்பில் 30 ஆண்டுகளில் முதல்முறையாக கனடாவுக்கு இடம் இல்லாத நிலை தோன்றியுள்ளது.

சர்வதேச Ice Hockey உலகை கட்டுப்படுத்தும் மிக உயரிய அமைப்பான IIHF (International Ice Hockey Federation) அமைப்பின் புதிய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியானது.

கடந்த முப்பது ஆண்டுகளில் கனடிய பிரதிநிதி ஒருவர் இல்லாமல் இந்த சபை அமைவது இதுவே முதல்முறையாகும்.

சபையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்சம் 3 இடங்களுக்கான போட்டியில், Hockey கனடா அமைப்பின் தலைவர் Katherine Henderson களம் இறங்கினார்

ஆனால், எதிர்பாராத விதமாக பதிவான வாக்குகளின் பற்றாக்குறை காரணமாக இரண்டாவது சுற்றில் அவர் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு தோல்வியடைந்தார்.

Ice Hockey விளையாட்டின் தாயகமாகவும், உலகின் அசுர பலமிக்க நாடாகவும் கருதப்படும் கனடாவுக்கு, IIHF அமைப்பின் 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இடம் கிடைக்காமல் போனது சர்வதேச Hockey வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக மாறியுள்ளது.

Related posts

ஒப்பந்தத்திற்கு ‘மிக நெருக்கமாக’ உள்ளோம்: Dominic LeBlanc

Lankathas Pathmanathan

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

Lankathas Pathmanathan

முடிவுக்கு வரும் இலங்கைக்கான கனடிய தூதுவரின் பதவி காலம்!

Lankathas Pathmanathan

Leave a Comment