தேசியம்
செய்திகள்

October இறுதியில் துருக்கி பயணமாகிறார் Mark Carney!

பிரதமர் Mark Carney இந்த மாத இறுதியில் துருக்கி பயணமாகிறார்.

கனடிய வரலாற்றில் துருக்கிக்கு ஒரு கனடியப் பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தப் பயணம் அமைகிறது.

அங்கு அவர் துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan-னை Mark Carney நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கனடியப் பிரதமர்கள் G20 போன்ற பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்பதற்காக மட்டுமே துருக்கி பயணமாகியுள்ளனர்.

ஆனால், கனடா – துருக்கி ஆகிய இரு நாடுகளின் உறவை மட்டுமே முன்னிறுத்தி ஒரு கனடியப் பிரதமர் அங்குப் பிரத்தியேகப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்த பயணம் முன்னெடுக்கப்படுகிறது.

அமெரிக்காவைத் தவிர்க்கும் கனடாவின் புதிய வியூகமாக இந்த பயணம் அமைகிறது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ பயண அட்டவணை, இருதரப்பு பேச்சுவார்த்தை விபரங்கள் வரும் நாட்களில் பிரதமரின் அலுவலகத்தால் முறைப்படி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Quebec, Ontario மாகாணங்களில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Gaya Raja

கனடா பல் மருத்துவ கொடுப்பனவு ஊடாக இதுவரை ஒரு இலட்சம் குழந்தைகள் பலன்

Lankathas Pathmanathan

Haitiக்கான புதிய உதவிகளை அறிவித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment