Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை Alberta மாகாணத்தின் அரசியல் தலைவர்களும், முதற்குடியினர் தலைவர்களும் வரவேற்றனர்.
கனடாவின் புதிய Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை கனடிய வரலாற்றில் முதலாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
Alberta மாகாணத்தின் எண்ணெய் வளம் மிக்க Oilsands பிராந்திய அரசியல், முதற்குடியினர் தலைவர்கள் இந்த புதிய திட்டத்திற்கு தங்களது எச்சரிக்கையுடனான தற்காலிக வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் திட்டம் தமது பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும், மிகப்பெரிய பொருளாதார மறுமலர்ச்சியையும் கொண்டு வரும் என அவர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
இந்தத் திட்டத்தை மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையிலான முன்னெப்போதும் இல்லாத கூட்டு உழைப்பு என Wood Buffalo பிராந்திய மாநகர முதல்வர் Sandy Bowman மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் போது தங்களது பகுதி ஒரு பொருளாதார எழுச்சியை சந்திக்கும் என இக்குழாய் வழித்தடத்தில் அமைந்துள்ள Edson நகரசபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்படும் பொருளாதாரப் பங்குகள், வேலைவாய்ப்புகள் வரவேற்கத்தக்கது என்றாலும், பூர்வகுடி நிலங்களின் சுற்றுச்சூழல், நன்னீர் பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என முதற்குடியினர் தலைவர்கள் கூறியுள்ளனர்:
