Ontario Liberal கட்சித் தலைமைத்துவ போட்டியில் இருந்து Eric Lombardi விலகியுள்ளார்.
தலைமைத்துவப் போட்டியாளரான Eric Lombardi தனது பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்து, போட்டியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.
Ontario மாகாண LIberal கட்சியின் (OLP) அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்தத் தகவலை Eric Lombardi புதன்கிழமை (30) பகிர்ந்துள்ளார்.
போட்டியில் இருந்து விலகிய நிலையில் Etobicoke-Lakeshore தொகுதியின் Liberal மாகாண சட்டமன்ற உறுப்பினரான Lee Fairclough-ற்கு தனது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.
Eric Lombardi கொண்டுள்ள கொள்கை ரீதியான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என Lee Fairclough, தனது X தளத்தில் விடுத்துள்ள நன்றியறிதல் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுக்க நேரிட்டது என தனது முடிவு குறித்து Eric Lombardi கூறினார்.
தான் சட்டமன்ற உறுப்பினராக (MPP) தேர்ந்தெடுக்கப்படாத நபர் என்பதால் இந்தத் தேர்தலில் வெல்வது ஆரம்பத்திலிருந்தே சவாலானது என்பதைத் தான் அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Eric Lombardi அறிவித்துள்ள தலைமைப் போட்டியில் இருந்து விலகும் முடிவைத் தொடர்ந்து தற்போது கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் Navdeep Bains, Stephanie Bowman, Lee Faircloug, Dylan Marando என நான்கு மட்டுமே களத்தில் எஞ்சியுள்ளனர்.
Rob Cerjanec ஏற்கனவே தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றிருந்தார்.
Ontario மாகாண Liberal கட்சி உறுப்பினர்களும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எதிர்வரும் November 9 முதல் 20 வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, Ontario மாகாண Liberal கட்சி புதிய தலைவர் 21-ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
