September 29, 2026
தேசியம்
செய்திகள்

திலீபன் நினைவுத் தூபி அகற்றியதற்கு Brampton நகர முதல்வர் கண்டனம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டதை Brampton நகர முதல்வர் Patrick Brown கண்டித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

தமிழர்களின் நினைவுகூரும் உரிமையை பறிக்கும் இலங்கை  அரசின் இந்தச் செயலுக்கு Brampton நகர முதல்வர் Patrick Brown தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Brampton Chinguacousy பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் நின்று அவர் தனது கண்டன செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

 

 

திலீபனின் சிலை அகற்றப்பட்டது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்ட அவர், இத்தகைய அச்சுறுத்தல்களால் தமிழ் வரலாற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாது எனவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேசத் தமிழ் சமூகம் பதிவு செய்யும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக Toronto நகரில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு  முன்பாக கனடிய தமிழர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் இந்தக் கண்டனம் வெளியானது.

Related posts

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Lankathas Pathmanathan

Air கனடா விமானப் பணியாளர்கள் ஒப்பந்த வாக்களிப்பு புதன்கிழமை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

மத்திய எரிவாயு வரிகளை தற்காலிகமாக இரத்து செய்ய Conservative கட்சித் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment