ஏழு கனடிய அணிகள உட்பட 32 அணிகள் கொண்ட புதிய NHL Stanley Cup கோப்பைக்கான தொடர் ஆட்டங்கள் இந்த வாரம் ஆரம்பிக்கின்றன.
33 ஆண்டுகளுக்கு பின்னர் கனடிய அணி ஒன்று Stanley Cup கோப்பையை வெற்றி பெறுமா என்ற கேள்வியுடன் இந்த வருட ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பிக்கின்றன.
முதல் நாள் ஆட்டத்தில் Toronto Maple Leafs, Edmonton Oilers, Vancouver Canucks, Montreal Canadiens ஆகிய கனடிய அணிகள் களம் இறங்குகின்றன.
புதிய கூட்டு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் படி, இம்முறை ஒவ்வொரு அணியும் 82 ஆட்டங்களுக்கு பதிலாக 84 ஆட்டங்களில் விளையாட உள்ளதால் இம்முறை ஆட்டங்கள் முன்னதாகவே ஆரம்பிக்கின்றன.
1993-ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்த ஒரு கனடிய அணியும் Stanley Cup பட்டத்தை வெல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
