கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் விமானங்களின் தாமதங்கள் 85 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலத்தில் கனடாவின் பிரதான நான்கு சர்வதேச விமான நிலையங்களில் விமான தாமதங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது.
கனடாவின் வான் வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான NAV கனடா திங்கட்கிழமை (28) இந்தத் தகவலை வெளியிட்டது.
Toronto, Vancouver, Calgary, Montréal ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் விமான தாமதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளது.
இதில் Toronto Pearson சர்வதேச விமான நிலையில் அனைத்து கனடிய விமான நிலையங்களில் மிகச் சிறந்த செயல்திறனை பதிவு செய்துள்ளது.
இங்கு தாமதங்கள் கடந்த ஆண்டின் 0.24 சதவீதத்திலிருந்து 0.04 சதவீதமாக குறைந்துள்ளது.
Vancouver சர்வதேச விமான நிலையம் மிக அதிவேகமானதும் கூர்மையானதுமான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இங்கு கடந்த கோடையில் 4.42 சதவீதமாக இருந்த தாமதங்கள், இம்முறை 0.64 சதவீதமாக குறைந்துள்ளது.
Calgary விமான நிலையம் 1.16 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகவும், Montréal-Trudeau விமான நிலையம் 1.16 சதவீதத்திலிருந்து 0.28 சதவீதமாகவும் தங்களது தாமதங்களை குறைத்துள்ளன.
கடந்த வசந்த காலத்தில் 200 ஆக இருந்த வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை எண்ணிக்கை, கடந்த August மாத முடிவில் 170 ஆக குறைந்துள்ளது இந்தச் சேவை மேம்பாட்டிற்கு முக்கியக் காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
கனடாவின் நான்கு பெரிய விமான நிலையங்களிலும் தனியார் முதலீடுகளை ஈர்க்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் Mark Carney அண்மையில் அறிவித்த நிலையில் NAV கனடாவின் இந்தத் தரவுகள் வெளியாகின.
