கனடாவின் வடக்குப் பகுதியான Arctic பிராந்தியத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அண்மைய ஆண்டுகளில் கணிசமாக மாறியுள்ளன என கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு, உலகளாவிய இராஜதந்திர மாற்றங்களுக்கு மத்தியில் இந்த கருத்தை அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் Arctic வட்டத்தை நோக்கி மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Marco Rubio நடத்திய Arctic நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்று, NATO கட்டமைப்பிற்குள் Arctic பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதித்ததாக அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
பிரதமர் Mark Carney தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்களை 2 சதவீதமாக உயர்த்தியுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
