தேசியம்
செய்திகள்

கனடா திரும்பும் பயணிகள் மீண்டும் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டும்

கனடா திரும்பும் பயணிகள் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களில் இருந்து கனடா திரும்புபவர்கள் நாட்டிற்குள் மீண்டும் நுழைவதற்கு எதிர்மறையான PCR COVID சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவுக்குப் பின்னர் , மத்திய அரசின் இந்த முன் வருகை சோதனைக் கொள்கை அமலுக்கு வந்தது.

இது கனடாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் PCR  மூலக்கூறு சோதனையை கட்டாயமாக்குகிறது

Omicron திரிபின் தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos இந்த நடைமுறையை அறிவித்தார்.

கடந்த புதன்கிழமை, அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு மத்திய அரசாங்கம் ஒரு பயண ஆலோசனையை கனடியர்களுக்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச பட்டதாரிகள் மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்கலாம்!

Lankathas Pathmanathan

November மாதம் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment