Quebec மாகாணத்தின் Montreal தெற்கு கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த உலங்கு வானூர்தி விபத்தில், விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை (26) இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் பலியானவர்கள் Loucas Perreault, Chantal Raymond, Gabriel Jasmin, விமானி Suzzane Jutras என் அடையாளங் காணப்பட்டனர்.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (TSB), உள்ளூர் காவல்துறையினர் இணைந்து இந்த விபத்து குறித்த விசாரணையை முன்னெடுக்கிறது.
உலங்கு வானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்தில் மேலதிகத் தரவுகளை சேகரித்து வருகின்றனர்.
இதில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட காவல்துறையினர், அவர்களின் குடும்பத்தினர் உதவியுடன் அடையாளங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து Montreal காவல்துறையினர் தற்போது தீவிர புலனாய்வு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
