70 சதவீத Alberta மக்கள் கனடாவுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.
Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனி நாடாக செல்வது குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுவாக்கெடுப்பு நெருங்கி வரும் நிலையில், 70 சதவீத Alberta மக்கள் தாங்கள் கனடாவுடன் இணைந்திருக்க விரும்புவதாக புதிய பிரத்தியேகக் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 10 பேரில் 7 பேர் (70 சதவீதம்) October 19 நடைபெற உள்ள பொது வாக்கெடுப்பில் கனடாவுடன் நீடிப்பதற்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாகாணம் தனியாகப் பிரிவதற்கான அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பு செயல்முறைகளை ஆரம்பிக்க வேண்டும் என 20 சதவீத மக்கள் மட்டுமே இந்த கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரிவினைக்கான ஆதரவு பெரும்பாலும் கிராமப்புற Alberta பகுதிகள் (28 சதவீதம்), இளைஞர்கள் (28 சதவீதம்), ஆண்கள் (25 சதவீதம்) மத்தியிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.
