தேசியம்
செய்திகள்

Toronto-வில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026: October 15 முதல் உலகத் தமிழர்கள் ஒன்று கூடுகின்றனர்!

“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற கருப்பொருளில், அனைத்துலகத் தமிழர் பேரவை (Federation of Global Tamils – FGT) ஏற்பாடு செய்துள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 October 15 முதல் 18 வரை கனடாவின் Toronto நகரில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் இறுதி உத்தேச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு வியாழக்கிழமை (24) நடைபெற்றது.

மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சி நிரல் குறித்தும் சிறப்பம்சங்கள்:குறித்தும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் இந்த உலகளாவிய கலந்துரையாடல் தளத்தில் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அழைப்பு விடுத்தார் .

தமிழ் மொழி, செய்யறிவு (AI), புதிய தொழில்நுட்பம், பண்பாடு, பொருளாதாரம், வரலாறு, வடகிழக்கு பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்துறைகளை மையப்படுத்தி பல்வேறு ஆய்வுக் கட்டுரை அமர்வுகள் October 15 காலை முதல் நடைபெறும்.

October 17 சனிக்கிழமை மாலை கனடா, ஐரோப்பா, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை, பண்பாட்டு இரவு நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.

October 18 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நண்பகல் வரை எதிர்கால ஆய்வு, சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் நடைபெறும்.

இந்த நிகழ்வுகளின் நிறைவாக, October 18 ஞாயிறு மாலை FGT-யின் இரண்டாவது ஆண்டு விருந்து,  விருது வழங்கும் விழா நடைபெறும்.

கல்வி, ஆய்வு, சமூக சேவை, தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இதில் அங்கீகரிக்கப்படுவர்.

Related posts

இராணுவ தளபாடங்கள் அடங்கிய கனடிய விமானம் உக்ரைனை சென்றடடைந்தது

Lankathas Pathmanathan

Ontario முதல்வருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம்

Lankathas Pathmanathan

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment