September 19, 2024
தேசியம்
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.

Mexicoவில் இருந்து அமெரிக்காவின் Los Angeles நகருக்கு கடத்தப்படும் போதைப் பொருட்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் நீண்ட தூர வாகனங்களில் விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

“Operation Dead Hand” என பெயரிடப்பட்ட இந்த எல்லை தாண்டிய நடவடிக்கையில் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இவர்களில் ஐந்து கனேடியர்கள் அடங்குகின்றனர்.

கனடாவில் கைதானவர்கள் Quebec, Ontario, Alberta மாகாணங்களை சேர்ந்தவர்கள் என RCMP தெரிவித்தது.

கைதானவர்கள் Montreal நகரை சேர்ந்த 55 வயதான Roberto Scoppa, 32 வயதான Ivan Gravel Gonzalez, Brampton நகரை சேர்ந்த 25 வயதான Ayush Sharma, Brampton நகரை சேர்ந்த 60 வயதான Guramrit Sidhu,  Calgary  நகரை சேர்ந்த 29 வயதான Subham Kumar என அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் விசாரணைக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் RCMP கூறுகிறது

Related posts

உக்ரைனில் கனேடிய ஆயுதப் படைகள் போரில் ஈடுபடாது: பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதி

Lankathas Pathmanathan

Fairview Mall துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

முதலாவது ஈழ தமிழர் கனடாவில் அமைச்சராக பதவியேற்றார்

Lankathas Pathmanathan

Leave a Comment