தேசியம்
செய்திகள்

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

காசா பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

பிரதமர் Justin Trudeau இதனை தெரிவித்தார்.

தனது அரசாங்கம் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் “தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என பிரதமர் கூறினார்.

Calgary நகரை சேர்ந்த ஊடகவியலாளர் Mansour Shouman காசாவில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தனர்.

இவர், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் நடந்து வரும் மனிதாபிமான முயற்சிகளை ஆவணப்படுத்த உதவுவதற்காக அங்கு தங்கியிருந்தார்.

காசாவில் காணாமல் போன கனேடியர் குறித்து  அறிந்திருப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சு வார இறுதியில் உறுதிப்படுத்தியது.

நிலைமையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவரது குடும்ப உறுப்பினர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனாலும் தனியுரிமை காரணங்களுக்காக ஏனைய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related posts

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja

70 மில்லியன் டொலர்களை வெற்றி பெற்ற தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment