தேசியம்
செய்திகள்

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: NACI பரிந்துரை

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு திங்கட்கிழமை இந்த பரிந்துரையை வெளியிட்டது. NACI, தடுப்பூசிகளின் பயன்பாட்டிற்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கும் தேசிய தடுப்பூசி குழுவாகும். ஒற்றை தடுப்பூசியான Johnson & Johnson தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசி பெறுவதை திட்டமிட கடினமாக இருப்பவர்களுக்கு வழங்க முன்னுரிமை அளிப்பது சிறந்தது என்றும் NACI பரிந்துரைக்கிறது.

Johnson & Johnson தடுப்பூசி தற்போது கனடாவில் விநியோகிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கனடாவை வந்தடைந்த 3 இலட்சம்  Johnson & Johnson தடுப்பூசியின் உபயோகத்தை Health கனடா வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் தர உறுதிப்படுத்தல் சோதனைகளுக்காக இந்த முடிவை Health கனடா எடுத்துள்ளது. 

Related posts

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிப்பு!

Gaya Raja

சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment