தேசியம்
செய்திகள்

Ontario:பல வாரங்களின் பின்னர் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

பல வாரங்களுக்கு பின்னர் முதல் தடவையாக Ontario செவ்வாய்க்கிழமை 3,000க்கும் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது.

April மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் தடவையாக 3,000க்கும் குறைவான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். 2,791 தொற்றுக்களும் 25 மரணங்களும் அறிவிக்கப்பட்டன.  

Ontarioவில் திங்கட்கிழமை  3,436, ஞாயிற்றுக்கிழமை 3,732, சனிக்கிழமை 3,369 என புதிய தொற்றுக்கள் பதிவாகின. தீவிர சிகிச்சை பிரிவுகளில் 886 தொற்றாளர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் Ontario மிக மோசமான தொற்று பரவல் நிலையை தாண்டியுள்ளதாக  சுகாதார அமைச்சர் Christine Elliott  கூறினார்.

Related posts

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan

மீண்டும் உயர்வடையும் B.C. குறைந்தபட்ச ஊதியம்

உக்ரேனியர்கள் பயணித்த மற்றும் ஒரு விமானம் கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!