தேசியம்
செய்திகள்

அடுத்த கல்வி ஆண்டில் கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும்: Ontario அரசாங்கம் வலியுறுத்தல்

அடுத்த கல்வி ஆண்டில் Ontario மாகாண கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும் என மாகாண அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

 Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce   செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை தெரிவித்தார். 2021-22ஆம் கல்வி ஆண்டு முழுவதும் இணையவழி கல்வியை ஒரு தெரிவாக மாணவர்களுக்கு கல்விச் சபைகள் வழங்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

Durham, Waterloo போன்ற சில கல்விச் சபைகள் அடுத்த ஆண்டில் இணைய வழி கல்விக்கான தெரிவை வழங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. Toronto கல்விச் சபை எதிர்வரும் கோடை கால வகுப்புகள் அனைத்தும் இணைய வழியாக நடைபெறும் என அறிவித்துள்ளது.

Related posts

பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு

Lankathas Pathmanathan

Ontario மாகாண இடைத் தேர்தலில் PC வெற்றி!

Lankathas Pathmanathan

Quebec பனிப்பொழிவு காரணமாக மின்சாரத்தை இழந்த 106,000 வீடுகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment