தேசியம்
செய்திகள்

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Torontoவின் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலிலும் Liberal கட்சி வெற்றிபெற்றது.

Toronto Centre தொகுதியில் Marci Ien, York Centre தொகுதியில் Ya’ara Saks ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு நேற்று (திங்கள்) நடைபெற்றது .

Conservative, பசுமைக் கட்சிகளின் கடுமையான சவால்களை மீறி இந்த இரண்டு இடைத் தேர்தல்களை Liberal கட்சி வெற்றிபெற்றது. ஆனாலும் இந்தத் தேர்தலில் Liberal கட்சி தங்கள் வாக்குக்களின் வீழ்ச்சியையும் கண்டது.

Toronto Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் நிதி அமைச்சர்.Bill Morneau பதவி விலகிய நிலையிலும் York Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Michael Levitt பதவி விலகியதை தொடர்ந்தும் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை Liberal அரசாங்கம் COVID பெரும் தொற்றின் பின்னர் எதிர்கொண்ட முதலாவது தேர்தல் சோதனையாக இந்த இடைத் தேர்தல் அமைந்திருந்தது.

Toronto Centre தொகுதி

Toronto Centre தொகுதியில் வெற்றி பெற்ற Marci Ien

Toronto Centre தொகுதியில் ஒளிபரப்பாளர் Marci Ien 42 சதவீதமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் பசுமை கட்சியின் புதிய தலைவி Annamie Paul போட்டியிட்டிருந்தார். அவருக்கு 32.7 சதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தன. Toronto Centre தொகுதியில் இம்முறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 25,203 பேர் (30.96 சதவீதம்) மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

York Centre தொகுதி

York Centre தொகுதியை வெற்றி பெற்ற Ya’ara Saks

York Centre தொகுதியை Ya’ara Saks கடுமையான போட்டியின் பின்னர் வெற்றி பெற்றார். இவருக்கும் Conservative கட்சியின் வேட்பாளர் Julius Tiangsonக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் Liberal கட்சியின் Ya’ara Saks 8,253 வாக்குகளை (45.7 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். York Centre தொகுதியில் இம்முறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 25.64 சதவீதமான வாக்காளர்களில் மாத்திரமே வாக்களித்திருந்தனர். இந்தத் தொகுதியில் மக்கள் கட்சியின் ( People’s Party) தலைவர் Maxime Bernier போட்டியிட்டிருந்தார். இருந்தபோதிலும் அவர் 642 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்தது.

இந்த இரண்டு தொகுதிகளும் Liberal கட்சியின் கோட்டைகளாக கருதப்படுகின்றன. கடந்த இலையுதிர்கால பொதுத் தேர்தலில் Liberal கட்சி இந்த இரண்டு தொகுதிகளிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர்.

Related posts

பொதுத் தேர்தலில் இம்முறை ஏழு தமிழ் வேட்பாளர்கள்!

Gaya Raja

கனடாவில் வேகமாக பரவும் COVID தொற்றின் புதிய திரிபு

Lankathas Pathmanathan

வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்.

Lankathas Pathmanathan

Leave a Comment