New York நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) கனடிய பிரதமர் Mark Carney பங்கேற்கவுள்ளார்.
ஐ.நா. சபையில் முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து அவர் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் போர், எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் Mark Carney New York செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது வருடாந்திர கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக Mark Carney September 21 முதல் 23 வரை New York நகரில் தங்கியிருப்பார்.
அங்கு உலகளாவிய பொருளாதார கொள்கைகள், சர்வதேச அமைப்புகளின் கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இம்முறை அவர் ஐ.நா. பொதுச் சபையில் Mark Carney உரை நிகழ்த்த மாட்டார் என அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது.
அவருக்குப் பதிலாக, கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் September 26 அன்று கனடா நாட்டின் சார்பில் அதிகாரப்பூர்வ உரையினை நிகழ்த்துவார்.
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள கனடாவின் இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில், இந்த ஐ.நா. மாநாடு மிக முக்கியமான ஒன்றாக நோக்கப்படுகிறது.
Donald Trump-பின் வர்த்தகக் கொள்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடா ஏற்கனவே பிரான்ஸ், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் விண்வெளி, பாதுகாப்பு, Arctic எரிசக்தி ஆகிய துறைகளில் புதிய கூட்டணிகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ், Britain ஆகிய நாடுகளுடன் இணைந்து, மத்திய கிழக்கு அமைதி செயல்முறைகள், இரு நாட்டுத் தீர்வு தொடர்பான முக்கிய சர்வதேச மாநாடு ஒன்றை Mark காரனே செவ்வாய்க்கிழமை (22) கூட்டாக முன்னின்று நடத்த உள்ளார்.
உலகளாவிய தொழிலதிபர்கள், பல்வேறு நாடுகளின் முக்கியத் தலைவர்களை பிரதமர் நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.
ஆனாலும் இந்த மாநாட்டின் இடையே Mark Carney அமெரிக்க ஜனாதிபதி Doanld Trump-பை நேரில் சந்தித்துப் பேசுவாரா என்பதில் இன்னும் தெளிவற்ற சூழ்நிலை நீடிக்கிறது.
இரு தலைவர்களுக்கும் இடையேயான இருதரப்பு சந்திப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
