Toronto காவல்துறையில் ஊழலுக்கு இடமில்லை என Toronto காவல்துறை தலைவர் எச்சரித்தார்.
Project South ஊழல் விசாரணை வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியானது.
ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் காவல்துறையில் இடமில்லை என Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Project South விசாரணை தொடர்பான இரகசிய நீதிமன்ற ஆவணங்கள் புதன்கிழமை (16) அதிகாரப்பூர்வமாக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த புதிய வெளிப்பாடுகளை தொடர்ந்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
Toronto காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ள இந்த ஊழல் வழக்கு, மாகாண அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
