Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow முன்னிலை வகிப்பதாக புதிய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
Mainstreet Research வெளியிட்டுள்ள புதிய கருத்துக் கணிப்பின்படி, முதல் விவாதத்தின் பின்னர் Toronto நகர முதல்வர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இறுதியாக வெளியான இந்த மக்கள் கருத்து கணிப்பில் Olivia Chow முன்னிலை வகித்தாலும், Brad Bradford போன்ற போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இவர்கள் இருவருக்கும் இடையே வெறும் 7 சதவீத இடைவெளி மட்டுமே இருப்பதால், தேர்தல் முடிவை இப்போது கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அண்மைய கருத்து கணிப்பில் Olivia Chow 38 சதவீதம் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார்.
நகர சபை உறுப்பினர் Brad Bradford 31 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் Chris Alexander 8 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
வாக்காளர்களில் 17 சதவீதமானவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவில்லை.
October 26 அன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் உள்ளது.
இந்தக் கருத்து கணிப்பு குறித்து Olivia Chow கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Toronto மக்கள் தற்போதைய நிலையில் இருந்து மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன என Brad Bradford வெளியிட்ட செய்திக்குறிப்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Toronto நகரின் குற்றச்சாட்டுகள், பொதுப் பாதுகாப்பு ஆகியன இந்தத் தேர்தலின் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
52 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தீர்மானிப்பதில் பாதுகாப்பு மிக முக்கிய காரணி என தெரிவித்துள்ளனர்.
62 சதவீத மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் Toronto நகரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நம்புகின்றனர்.
