September 18, 2026
தேசியம்
செய்திகள்

153 million அடையாள அட்டைகள் திருட்டு: அமெரிக்க FBI விசாரணையை தீவிரமாக கண்காணிக்கும் RCMP!

வட அமெரிக்கா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் ஓட்டுநர் உரிம தரவுகள் (Driver’s licences) சட்டவிரோதமாகக் கசிந்துள்ள தகவல் வெளியானது.

இந்த விடயத்தில், அமெரிக்காவின் FBI முடுக்கிவிட்டுள்ள புலனாய்வு விசாரணை குறித்து தாங்கள் அறிந்துள்ளதாக RCMP அறிவித்துள்ளது.

வட அமெரிக்காவில் மாபெரும் cyber தாக்குதல் குறித்த தகவல் வெளியானது.

வட அமெரிக்கா முழுவதும் உள்ள சுமார் 153 million பேரின் ஓட்டுநர் உரிமங்கள், அரசு அடையாள அட்டை விபரங்கள் ஒரு மாபெரும் cyber தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவல், வட அமெரிக்க நுகர்வோரின் அடையாளப் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் பின்னணியில் அமெரிக்காவின் FBI முடுக்கி விட்டுள்ள சர்வதேச விசாரணை குறித்து தாங்கள் அறிந்துள்ளதாக RCMP அறிவித்துள்ளது.

இந்த நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் RCMP கூறியது.

இந்தத் தரவு திருட்டை முதலில் September 1 அன்று சுயாதீன பத்திரிகையாளர் Brian Krebs கண்டறிந்தார்.

இந்த நிலையில் கனடியர்கள் தங்களின் நிதிநிலை, அரச கணக்குகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு RCMP கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மாபெரும் ஓட்டுநர் உரிம தரவுத் திருட்டு விசாரணை குறித்த குறிப்பிட்ட விபரங்களை வெளியிட RCMP மறுத்துள்ளது.

Related posts

ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் கனடாவில் அதிகரிப்பு

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan

LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும்?

Lankathas Pathmanathan

Leave a Comment