அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட Scarborough பகுதியின் மூன்று Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow-வுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இது Olivia Chow முன்னெடுக்கும் மறு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு வலுவான அரசியல் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழரும் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி (Scarborough-Guildwood-Rouge Park), நாடாளுமன்ற உறுப்பினர் Jean Yip (Scarborough-Agincourt), நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid (Scarborough Centre-Don Valley East) ஆகியோர் Olivia Chow-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Scarborough பகுதியில் அவர் மேற்கொண்ட உள்ளூர் முதலீடுகளையும், திட்டங்களையும் புதன்கிழமை (16) வெளியிடப்பட்ட ஒரு கூட்டு video பதிவில், இதற்குக் காரணமாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆதரவு அறிவிப்பில் மத்திய, நகராட்சி அரசாங்கங்களுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டதுடன், Olivia Chow-வின் பதவிக் காலத்தில் Scarborough பகுதியில் செயல்படுத்தப்பட்ட பல முக்கிய திட்டங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
இந்த மூன்று மத்திய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த ஆதரவு, பாரம்பரிய அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டி ஒரு பரந்த ஆதரவு தளத்தை உருவாக்குவதாக Olivia Chow-வின் மறு தேர்தல் பிரச்சார குழு குறிப்பிடுகிறது.
Toronto நகர முதல்வர் Olivia Chow, நகரசபை உறுப்பினர் Brad Bradford, முன்னாள் மத்திய அமைச்சர் Chris Alexander ஆகியோர் உட்பட மொத்தம் 45 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
October 26 அன்று தேர்தல் வாக்களிப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
