September 12, 2026
தேசியம்
செய்திகள்

தீவிரமடையும் வர்த்தகப் போர்: அவசரமாகக் கூடியது கனடிய அமைச்சரவை!

கனடிய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது

கனடா அமெரிக்கா வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கனடியப் பிரதமர் Mark Carney தனது அமைச்சரவையை கூட்டியுள்ளார்.

இந்த அமைச்சரவைக் கூட்டம் Alberta மாகாணத்தில் உள்ள Banff நகரில் நடைபெறுகிறது.

பிரதமர் தனது அமைச்சர்களுடன் வியாழன் (10(, வெள்ளிக்கிழமைகளில் (11) அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கனடிய நாடாளுமன்றத்தின் இலையுதிர் கால கூட்டத் தொடர் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, முதல் குடியினரின் கூட்டாண்மை, சர்வதேச விவகாரங்கள், வர்த்தகப் போர் தற்காப்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதல்களைச் சமாளித்து, கனடாவின் தொழில் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான முக்கிய உத்திகள் இந்த கூட்டத்தில் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இடையே, கனடாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி  Volodymyr Zelenskyy அமைச்சரவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – அனிதா ஆனந்தராஜன்

Ontarioவின் புதிய COVID அவசரகால கட்டுப்பாடுகளின் முழு பட்டியல்:Full list of new COVID emergency restrictions in Ontario

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment