தேசியம்
செய்திகள்

கனடாவில் உக்ரைன் ஜனாதிபதி: கனடிய பிரதமருடன் அவசர ஆலோசனை!

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy அரசு முறைப் பயணம் மேற்கொண்டு கனடா வந்தடைந்தார்.

அவர் கனடிய பிரதமரை நேரில் சந்தித்து பேச உள்ளார்.

வியாழக்கிழமைக்கு (10) இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த உயர்மட்ட சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பொதுவான முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

இராணுவப் பாதுகாப்பு, பொருளாதார உறவுகள், எரிசக்தி கூட்டாண்மை ஆகிய விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.

Iceland, Norway ஆகிய நாடுகளுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு, Volodymyr Zelenskyy புதன்கிழமை (09) இரவு கனடாவின் Alberta மாகாணத்தை வந்தடைந்தார்.

வியாழன் காலை கனடிய பிரதமரை சந்திக்கும் அவர், தொடர்ந்து Banff நகரில் கூடியிருக்கும் கனடிய அமைச்சரவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

தனது மனைவியுடன் கனடா வந்துள்ள உக்ரைன் ஜனாதிபதி, தமது பயணத்தின் அடுத்த கட்டமாக Toronto , North Bay ஆகிய நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

2022-ஆம் ஆண்டு முதல், உக்ரைனின் இராணுவ உதவிக்காக 2029-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு $6.5 பில்லியன் வழங்குவதாக கனடா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுக்கள்!!

Gaya Raja

அமெரிக்காவின் கனடிய எல்லையை மெக்சிகோவுடன் ஒப்பிட முடியாது: Justin Trudeau

Lankathas Pathmanathan

உலக நாடுகளின் தலைவர்களை Mark Carney சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment