November 12, 2025
தேசியம்
செய்திகள்

GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது!

Liberal அரசாங்கத்தின் GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை இலக்காகக் கொண்ட இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் Senate சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கு செவ்வாயன்று (18) அரச அங்கீகாரம் கிடைத்தது.

இதன் மூலம் அரசாங்கத்தின் மசோதா C-30 செவ்வாய்கிழமை சட்டமாக மாறியது.

இதன் மூலம் GST தள்ளுபடியைப் பெறுபவர்கள் இந்த ஆண்டு கூடுதல் கொடுப்பனவை எதிர்பார்க்கலாம்.

இது அடுத்த ஆறு மாதங்களுக்கு GST தொகையை இரட்டிப்பாக்கும்.

இந்த மசோதா மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை தெரிவித்தார்.

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அவர் நினைவூட்டினார்.

Related posts

Bay of Quinte மாகாண இடைத் தேர்தல் இந்த வாரம்

Lankathas Pathmanathan

$1 மில்லியன் வெற்றி பெற்ற தமிழர்!

Lankathas Pathmanathan

தமிழ்ச் சமூக மையத்தின் புதிய இயக்குநர்கள் சபை அறிமுகம்!

Lankathas Pathmanathan

Leave a Comment