தெற்கு Ontario-வின் பல்வேறு எல்லை சோதனைச் சாவடிகளில் நடத்திய அதிரடி சோதனைகளில், $13.8 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த August மாதத்தில் கனடிய எல்லைப் பாதுகாப்பு முகாமையாக (CBSA) அதிகாரிகள் இந்தப் பறிமுதலை முன்னெடுத்தனர்.
அமெரிக்காவில் இருந்து பெரிய வணிக ரீதியிலான சரக்கு வாகனங்கள் மூலம் இந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், கனடாவிலும் வெளிநாடுகளிலும் பிற சட்டவிரோத, வன்முறைச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக CBSA தெரிவித்துள்ளது.
தற்போதைய இந்த அதிரடி பறிமுதல் மூலம், திட்டமிட்ட குற்ற கும்பல்களின் வருமான ஆதாரம் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு முதல் தெற்கு Ontario பிராந்தியத்தில் மட்டும் மொத்தம் $52.2 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
