கனடாவுடனான வர்த்தக பேச்சுவாத்தையின் இறுதி நேரத்தில் அமெரிக்கா மேலதிக நிபந்தனைகளை விதித்ததை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.
CNN தொலைக்காட்சியின் ஊடகவியலாளருடனான தொலைபேசி உரையாடலில் Donald Trump இந்தத் தகவலை ஏற்றுக் கொண்டார்.
கடந்த வார காலக்கெடுவிற்கு சற்று முன்னதாக இறுதி நேரத்தில் அமெரிக்கா புதிய நிபந்தனைகளை இணைந்ததாக Donald Trump குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைகளின் போது கனடா புதிய கோரிக்கைகளை முன் வைத்ததாகவும், முந்தைய உறுதி மொழிகளிலிருந்து பின் வாங்கியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் முன்னதாகக் கூறியிருந்தனர்
இருப்பினும், அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் இறுதி நேரத்தில் மேற்கொள்ளபட்ட மாற்றங்களினால் பேச்சுக்களை இடை நிறுத்த நேரிட்டதாக கனடிய பிரதமர் Mark Carney கூறியிருந்தார்.
இந்த இறுதி நேர மாற்றங்கள் நியாயமற்றதாகவும், பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாகவும் இருந்தன என குறிப்பிட்ட Mark Carney, எந்த ஒரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் அவை கேள்விக்குள்ளாக்கின எனவும் கூறினார்.
கனடாவின் கூற்றுகளை ஏன் மறுக்கவில்லை என CNN ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, தான் “எதையும் மறுப்பதில்லை” என Donald Trump பதிலளித்தார்.
