Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது.
நகரசபை தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நகரசபை உறுப்பினர் Brad Bradford-டை விட நகர முதல்வர் Olivia Chow-வின் முன்னிலை நிலையாக நீடிக்கிறது.
ஆனால், October 26 தேர்தலில் யாரை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது குறித்து நான்கில் ஒரு பங்கு வாக்காளர்களுக்கு இன்னும் முடிவெடுக்கவில்லை என புதிய கருத்து கணிப்பு கூறுகிறது.
Toronto வாக்காளர்களிடம் நடத்திய புதிய கருத்துக் கணிப்பில், அனைத்து வாக்காளர்களிடை Olivia Chow 38 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளார்.
Brad Bradford 30 சதவீத ஆதரவையும், Chris Alexander ஆறு சதவீத ஆதரவையும் இந்தக் கருத்துக் கணிப்பில் பெற்றனர்.
இரண்டு சதவீதத்தினர் வேறு ஒரு வேட்பாளரை ஆதரிப்பதாகவும், 24 சதவீதத்தினர் இதுவரை இவருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.
கடந்த March மாதம் நடத்திய கருத்துக் கணிப்புடன் ஒப்பிடுகையில், Olivia Chow-வின் ஆதரவு சற்று அதிகரித்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் Olivia Chow 35 சதவீத ஆதரவையும், Brad Bradford 29 சதவீத ஆதரவையும் பெற்றிருந்த நிலையில், 25 சதவீதம் பேர் தங்கள் முடிவை இன்னும் தீர்மானிக்கவில்லை என கூறியிருந்தனர்.
July மாதத்தில் தேர்தலில் பதிவு செய்த நிலையில் March மாதக் கருத்துக்கணிப்பில் Chris Alexander இணைக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
