விமானம் மோதியதில் Montreal விமான நிலைய ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
Pierre Elliott Trudeau சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
திங்கட்கிழமை (24) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Montreal காவல்துறையினர் தெரிவித்தனர்.
விமான நிலையத் தளத்தில் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த விமானம் ஒன்று ஒரு நபர் மீது மோதியதை தொடர்ந்து அவசர சேவையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
