Toronto நகரசபைக்கு திரும்பும் எண்ணம் எதுவும் இல்லை என மாகாணசபை உறுப்பினர் Kristyn Wong-Tam கூறினார்.
Toronto நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் இது தொடர்பான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2022 முதல் Toronto Centre தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் மாகாணசபை உறுப்பினரான அவர், நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் புதிய வேட்பாளர் ஒருவரை ஆதரித்தார்.
Toronto Centre தொகுதியின் நகரசபை உறுப்பினர் Chris Moise-சை எதிர்த்து போட்டியிடும் Curran Stikuts-சை அவர் ஆதரித்தார்.
எவ்வித தயக்கமும் நிபந்தனையும் இன்றி இந்த ஆதரவை வழங்குவதாக Toronto நகரசபைக்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Kristyn Wong-Tam கூறினார்.
Curran Stikuts நகரசபை உறுப்பினர் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை கடந்த May மாதத்தில் ஆரம்பித்த பல மாதங்களுக்குப் பின்னர் இந்த ஆதரவு கிடைத்துள்ளது.
2022 நகரசபைத் தேர்தலில் Kristyn Wong-Tam முன்னர் ஆதரித்த வேட்பாளரான நகரசபை உறுப்பினர் Chris Moise-சை பதவியிலிருந்து நீக்க Curran Stikuts முயல்கிறார்.
முன்னதாக உள்ளாட்சி அரசியலுக்குத் திரும்புவது குறித்துத் தீவிரமாக பரிசீலித்ததாகவும், அது “ஈர்க்கக்கூடியதாக” இருப்பதாகவும் Kristyn Wong-Tam கூறினார்.
முன்னாள் நகர முதல்வர்கள் Rob Ford, John Tory ஆகியோர் கீழ், 2010 முதல் 2022 வரை Kristyn Wong-Tam நகரசபை உறுப்பினராக பணியாற்றினார்.
Ontario மாகாணத்தில் Toronto உட்பட பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இம்முறை தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைகிறது.
