தேசியம்
செய்திகள்

கனடாவின் அதிக வயதுள்ள நபருக்கு COVID தடுப்பூசி வழங்கப்பட்டது!

கனடாவின் அதிக வயதுள்ளதாக அறியப்படும் நபருக்கு Torontoவில் முதலாவது COVID தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

Phyllis Ridgway தனது 114வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களின் பின்னர் முதலாவது  தடுப்பூசியை சனிக்கிழமை (13)  பெற்றுள்ளார். Sunnybrook சுகாதார அறிவியல் மையம் தனது Twitterரில் இந்தத் தகவலை வெளியிட்டது. March மாதம் 10ஆம் திகதி தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர் அதன் சில தினங்களின்  Pfizer தடுப்பூசியைப் பெற்றுள்ளார்.  

 

Ontario மாகாணத்தின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாத ஆரம்பம் முதல் 80 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. Ontario மாகாணம்  இதுவரை (சனிக்கிழமை) 1.1 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

Related posts

COVID தொற்றின் புதிய திரிபு Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும்

Lankathas Pathmanathan

சட்டமானது தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம்

Gaya Raja

புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனை வரவு செலவுத் திட்டம்: NDP தலைவர் Singh

Lankathas Pathmanathan

Leave a Comment