தேசியம்
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

அடுத்த தேர்தல் தொடர்பில் அமைச்சரவை மாற்றம் கூறுவதும் (கூறாததும்) என்ன?

கனடாவின் Liberal அரசாங்கம் ஒரு தேர்தலுக்கான காய் நகர்த்தலை செய்துள்ளது – ஆனால் இந்தக் காய் நகர்த்தல் அமைச்சரவை மாற்றத்தால் முன்கூட்டிய தேர்தலுக்கான அழைப்பை தவிர்க்க முடியாது என அர்த்தமாகாது.

2021ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தால் ஒரு தேர்தல் இடம்பெற வேண்டும் என்று தேவையில்லை – ஆனால், Liberal அரசாங்கத்துக்கு தேவைப்பட்டால் ஒரு தேர்தலுக்கு இந்த விடயம் உதவுகின்றது என கொள்ளலாம்.

அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானிக்கும் அமைச்சர்களை மாற்றுவது அரசாங்கங்களின் வழக்கம். ஆனால் Liberal அரசாங்கத்தின் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Navdeep Bains தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்காக அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்திருந்தார்.

அமைச்சரவையில் இருந்து விலகிய Navdeep Bains

புத்தாக்கம், விஞ்ஞானம், தொழில்துறை அமைச்சராக (Minister of Innovation, Science & Industry) Bains’ வகித்த பதவியை François-Philippe Champagne நிரப்ப மேற்கொள்ளப்பட்ட
மாற்றத்திற்கான தூண்டுதலாக இந்த அறிவித்தல் அமைந்தது என கொள்ளலாம்.

அமைச்சர் François-Philippe Champagne

ஆனால் Marc Garneau வெளிவிவகார அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்ட அதேவேளை, Omar Alghabra தனது நாடாளுமன்ற செயலாளர் பதவியில் இருந்து Garneau வகித்த போக்குவரத்து அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அத்துடன், Prairies பிரேதசத்தின் விசேட பிரதிநிதியாக Jim Carr மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் Justin Trudeau அறிவிக்கையில், வசந்த காலத்தில் தேர்தல் இடம்பெறுவதை இந்த மாற்றம் முன்னறிவிக்கிறதா என மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பிரதமர் ஒரு முன்கூட்டிய தேர்தலை வெளிப்படையாக நிராகரிக்கவில்லை. COVID 19 தொற்றுக்கும் எதிராக ஒரு தடுப்பூசியைப் பெற விரும்பும் அனைத்து கனேடியர்களும் தடுப்பூசியை பெறுவதற்கு முன்னர் ஒரு தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல விரும்பவில்லை என பிரதமர் Justin Trudeau கூறினார்.

ஆனாலும் இது சிறுபான்மை அரசாங்கம் அமைந்த நாடாளுமன்றங்களின் பரவலான தேர்தல் ஊகங்களை நிறுத்தாது. அமைச்சரவை மாற்றங்களை தேர்தல் அழைப்பிற்கான தெளிவான அறிகுறியாகக் கணிக்க ஏராளமான காரணிகள் உள்ளன – அவற்றில் ஒன்று February அல்லது March மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையுடன் தொடர்புபட்டது.

 Navdeep Bains & Justin Trudeau

பெருந்தொற்றும் தேசிய தடுப்பூசி பிரச்சாரமும் அந்த நகரும் காரணிகளில் மிக முக்கியமானவை என்பதுடன், எதிர்வுகூற முடியாதவையும் கூட. ஆனாலும், அவை எத்தகைய தேர்தல் திட்டங்களிலும் திருப்பத்தை ஏற்படுத்த போதுமானவைதான்.

அமைச்சரவை மாற்றத்தின் சில நாட்களின் பின்னர் பிரதமர் Trudeau, கனடியர்களுக்கு பல ஆண்டுகள் சேவை செய்ய விரும்புவதாகக் கூறினார். Trudeauவின் ஆளும் Liberal கட்சி நாடாளுமன்றத்தில் சிறுபான்மையான உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

அதாவது, ஆட்சி செய்வதற்கு எதிர்த்தரப்பினையே சார்ந்துள்ளதுடன், தாம் எந்நேரத்திலும் வீழ்த்தப்படலாம் என்பதை பிரதமர் அறிந்து வைத்திருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.

எனவே, இந்த அமைச்சரவை மாற்றமானது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு
தயாராவதை விட, தேர்தல் அழைப்பு எப்போது வந்தாலும் அதற்கு தயாராக இருப்பதைப் பற்றியதாகவே இருக்கின்றது.

ஒரு சிறுபான்மை அரசாங்கம் திடீரென வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்கள் அதன் நீடிப்புத்
தன்மையை அதிகரிக்கும் – Trudeauவின் அரசாங்கம் கனடாவின் சிறுபான்மை அரசாங்கங்களின் வழமையான காலாவதிகே காலத்தை நெருங்குகிறது என்பது புலப்படுகிறது.

Liberal கட்சி சந்தர்ப்பம் வாய்த்தால் அல்லது எதிர்க்கட்சிகள் அவர்களைத் தோற்கடிக்க
இணைந்தால் தேர்தல் அழைப்பிற்குத் தயாராகுவார்கள்.

Ontarioவும் Quebecகும் 2022இல் மாகாணத் தேர்தல்களை நடத்த திட்டமிட்டிருப்பதைக் கருத்தில் கொண்டால், அதற்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

ஆனால் 2021இல் ஒரு தேர்தல் வந்தால், இந்த அமைச்சரவை மாற்றம் Liberal கட்சிக்கு சாதகமாக காய்களை நகர்த்தும்.Carr அமைச்சரவையில் இணைக்கப்படுவதைத் தவிர (செயற்படுத்த அமைச்சு ஒன்று இல்லாவிட்டாலும்), இந்த மாற்றங்கள் அமைச்சுகளின் மாகாண ஒதுக்கீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

இது மாகாணங்களுக்குள் அமைச்சரவை பதவி நிலைகளின் பிராந்தியப் பங்கீட்டைக் கூட மாற்றவில்லை. ஆனால் அமைச்சரவையில் பதவி உயர்வு பெற்றதன் மூலம், Alghabra தற்போது Mississaugaவின் அதிகாரப்பூர்வமற்ற அமைச்சராகியுள்ளார்.

அமைச்சர் Omar Alghabra

Bains 2004ஆம் ஆண்டில் Mississauga–Brampton தெற்கு (அப்போது அழைக்கப்பட்டபடி)
தேர்தல் தொகுதியில் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றதுடன், 2011ஆம் ஆண்டில் தோல்வியடைந்திருந்தார்.

மீண்டும் 2015இல் Mississauga–Malton தொகுதியை வென்றதன் மூலம் நாடாளுமன்றம் திரும்பியதுடன், Trudeauவின் முதல் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.

Alghabra ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக Mississaugaவில் ஒரு நீண்ட சாதனைப் பதிவைக் கொண்டுள்ளார். அவர் முதலில் 2006இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008, 2011 ஆம் ஆண்டுகளில் அவர் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் 2015, 2019 ஆம் ஆண்டுகளில் Mississauga மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.

புதிய அமைச்சர் Alghabra பிரதமரின் நாடாளுமன்ற செயலாளராக சில கடினமான கோப்புகளைக் கையாண்டுள்ளார்.உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு ஈரானில் Ukraine விமானம் 752 (Ukraine International Airlines Flight 752) சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பணியாற்றினார்.

ஆனால் தேர்தல் ரீதியாக, Greater Toronto பகுதியில் Liberal கட்சிக்கு முதன்மை ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதில் Bains, Alghabra ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

GTA கனடாவின் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் ஆற்றலுள்ள பகுதியாகும். மேற்கு கனடா முழுவதிலும் Liberal கட்சி வென்ற அதே அளவிலான ஆசனங்களை (15) Mississauga, Brampton, Oakville, Burlington ஆகிய பகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டின் தேர்தலில் வெற்றி பெற்றது.

2019ஆம் ஆண்டின் தேர்தலின் பின்னர், GTAவின் இந்த பகுதிக்கு மூன்று அமைச்சரவை
அமைச்சர்கள் பரிசளிக்கப்பட்டனர்: Bains, சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் (International
Development Minister) Karina Gould. பொது சேவைகள், கொள்முதல் அமைச்சர் (Public Services and Procurement Minister) அனிதா ஆனந்த் (Oakville).

கடந்த தேர்தலில் இந்தப் பிராந்தியத்தை தம் வசப்படுத்தியமையே Liberal கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. இதேவேளை, Conservative கட்சி அங்கு வெற்றிக்கு போராடினார்கள். Mississauga, Brampton, Oakville, Burlington பகுதிகளில் 2015திற்கும் 2019திற்கும் இடைப்பட்ட தேர்தல்களில் Conservative கட்சி சராசரியாக 5.1 சதவீத புள்ளிகளை இழந்தது. ஒரு இடத்தைத் தவிர ஏனைய அனைத்திலும் தனக்கான ஆதரவையும் இழந்தது.

தமது வளர்ச்சிக்கான மாற்றத்தின் ஒரு பகுதியாக Conservative கட்சி நேர்மாறாக மாற வேண்டிய தேவை உள்ளது. 2011 முதல், இந்தப் பகுதியில் அக்கட்சி சராசரியாக 14.7 புள்ளிகளை இழந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் Conservative கட்சி கனடாவின் சில பகுதிகளிலேயே இதைவிட அதிகளவான ஆதரவை இழந்துள்ளது.

Liberal கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற விரும்பினால், தற்போதைய நிலையை
தக்கவைத்திருக்க வேண்டும். Bains’ வெளியேறிய பிறகும் Mississaugaவிற்கு அமைச்சர் ஒருவர் இருப்பதை அவர்கள் உறுதி செய்வது அதற்கு உதவும்.

Justin Trudeau மேற்கொண்ட ஏனைய நகர்வுகளின் தேர்தல் தாக்கங்கள் மிகவும் மிதமானவை. Carr அமைச்சரவைக்கு திரும்பியவுடன், Manitobaவின் Dan Vandal உடன் இணைந்து Vancouverரின் கிழக்கிலும், Thunder Bayயின் மேற்கிலும் ஒரு ஆசனத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே Liberal அமைச்சராகியுள்ளார்.

Prairies விசேட பிரதிநிதி Jim Carr

Prairies பிராந்தியத்தின் சிறப்பு பிரதிநிதியாக வடிவமைக்கப்பட்டுள்ள Carrஇன் பங்கு மேற்கு மாகாணங்களுடன் இந்த அரசாங்கத்தின் பலவீனமான உறவுகளை வெளிப்படையாக அங்கீகரிப்பதேயாகும்.

Alberta அல்லது Saskatchewan மாகாணங்களில் ஆசனங்கள் இல்லாததால், அரசாங்கத்தின் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் தேர்தல் ஆதாயங்களுக்கான அதன் வாய்ப்புகளும் அவ்வாறே உள்ளன.

Quebec நிலை அவ்வாறில்லை, இருப்பினும், பெரும்பான்மை அரசாங்கத்தை மீண்டும்
பெறுவதற்கான Liberal கட்சியின் எதிர்பார்ப்பிற்கு இது முக்கியமானது.

Liberal கட்சியைப் பொறுத்தவரை, Garneauவை போக்குவரத்து அமைச்சு பதவியில் இருந்து வெளிநாட்டு விவகாரங்களுக்கு நகர்த்துவது நம்பகமான, இசைவுள்ள, நிலையான செயலாற்றல் மிக்க ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. அத்துடன் அமைச்சரவையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் Quebec மாகாண குடிமகனாகவும் அவர் இருக்கிறார்.

வெற்றியாளருக்கு 6 சதவீத புள்ளிகளை அல்லது அதற்கும் குறைவான புள்ளிகளை Liberal கட்சி பெற்ற Quebecகின் 7 தேர்தல் தொகுதிகள் இருந்தன. அந்த இடங்களை மட்டும் வெற்றி பெற்றால் Liberal கட்சியினர் பெரும்பான்மை அரசாங்கத்தை ஓரளவேனும் பெற்றுக்கொள்வார்கள்.

இதிலிருந்து அவர்கள் இறுதியாக வென்ற தொகுதிகளை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை அனுமானிக்கலாம் – ஆனால், அதை உறுதியாகக் கொள்ள முடியாது. Quebec மாகாணத்தில் கடந்த தேர்தல்களில் 10 ஆசனங்களில் Liberal கட்சியை விட, Bloc Québécois 6 புள்ளிகளால் இரண்டாம் இடத்தில் உள்ளார்கள்.

நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தை காரணமாகக் கொண்டு தேர்தல் ஒன்று இடம்பெறும் என்பதை அனுமானிக்க முடியாது. ஆனால் ஒரு சிறுபான்மையான உறுப்பினர்கள் அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத்தில், அரசியல் என்பது அடுத்த தேர்தலைக் குறித்தானதாய் இருக்கும் – இந்த மாற்றமும் விதிவிலக்கல்ல.

Liberal கட்சியின் மூத்த ஆலோசகர்கள் சிலவேளை இந்த ஆண்டில் ஒரு தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார்கள். Trudeau எவ்வளவு காலம் ஆட்சியில் (பிரதமராகவும், கட்சியின் தலைவராகவும்) இருக்க விரும்புகிறார் என சிலர் தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புகிறார்கள்.

49 வயதான Trudeauவிற்கு பாடசாலை செல்லும் வயதில் 3 பிள்ளைகள் உள்ளார்கள். அவர் முதன்முதலில் November 2015இல் பிரதமராக பொறுப்பேற்றார். இடைவிடாத COVID 19 நெருக்கடிகளுக்கு மத்தியில் சில சமயங்களில் சோர்வாகத் தென்பட்டார். பெருந்தொற்றைக் கையாள்வது கடினம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், விரைவில் பதவி விலகுவதற்கான எந்த திட்டமும் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

“இந்த நாட்டிற்கு நான் ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய உள்ளன, எனவே கனேடியர்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் சேவை செய்ய எதிர்பார்க்கிறேன்” என்கிறார் Trudeau. கனடியர்கள் அவரது சேவையை விரும்புகிறார்களா என்பது தான் இப்போதைய கேள்வி !

  • ராகவி புவிதாஸ்

(தேசியம் சஞ்சிகையின் February 2021 சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Related posts

2020: கனடிய அரசியல் நிலை என்ன?

Gaya Raja

எல்லாம் “Tamil Fest” செய்யும் மாயம்!

Lankathas Pathmanathan

பெருந் தொற்று நேரத்திலும் பசிபோக்கும் FYFB உணவு வங்கி!

Gaya Raja

Leave a Comment