மூத்த நகரசபை உறுப்பினர் Paula Fletcher மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
Toronto நகரசபை உறுப்பினராக 23 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அவர் தனது ஓய்வை புதன்கிழமை (19) அறிவித்தார்.
நீண்ட கால நகர சபை உறுப்பினரான Paula Fletcher மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
தனது முடிவை மாற்றிக் கொண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக Toronto-Danforth பகுதியின் மூத்த நகரசபை உறுப்பினர் அறிவித்தார்.
இந்த நிலையில் அவர் தனது வேட்புமனுவை மீளப் பெற்றுள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட இதுவரை நான்கு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.
பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் முன்கூட்டிய வாக்களிப்பு காலம் October 6 முதல் October 11 வரையாகும்.
இம்முறை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
