ஐம்பது சதவீதம் வரையிலான கனடியர்கள் அமெரிக்கர்கள் மீது ‘விருப்பமற்ற’ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என புதிய கருத்துக் கணிப்போன்று தெரிவிக்கிறது.
கனடியர்கள் மீது அமெரிக்கர்கள் “மிகவும் சாதகமான” கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தாலும், கனடியர்கள் அமெரிக்கர்கள் மீது அதே போன்ற உணர்வு வெளிப்படுத்துவதில்லை என புதிய கருத்து கணிப்பு கூறுகிறது.
அமெரிக்கர்களில் 79 சதவீதம் பேர் கனடியர்களை சாதகமாகக் கருதுகின்ற போதிலும், கனடியர்களில் 48 சதவீதம் பேர் அமெரிக்கர்கள் பற்றி பாதகமான கருத்தைக் கொண்டுள்ளனர் என அந்த கருத்து கணிப்பு குறிப்பிடுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீதான “பரவலான வெறுப்பு” இருந்தபோதிலும், அமெரிக்கர்களை “நேர்மறையாக” நோக்கும் 45 சதவீத கனடியர்களின் எண்ணிக்கையை இது மிஞ்சுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வரும் அரசியல் பூசல்கள், Donald Trump, அவரது நிர்வாகம் குறித்த கனடியர்களின் பார்வையைத் தீவிரமாக எதிர்மறையாக மாற்றியுள்ளது என அந்த கருத்து கணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
“புறக்கணிப்புகளும் எல்லை தாண்டிய பயணங்கள் குறைந்திருப்பதும், அமெரிக்க விரோதப் போக்கு வெள்ளை மாளிகையை தாண்டி அமெரிக்கர்கள் மீதும் பரவியுள்ளதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன என அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
79 சதவீத கனடியர்கள் Donald Trump மீது சாதகமற்ற கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என அந்தக் கருத்துக் கணிப்பு குறிப்பிட்டது.
அமெரிக்கா கனடாவை ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாகவோ அல்லது நட்புறவுடனோ அணுக வேண்டும் என 78 சதவீத அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் கனடா அமெரிக்காவை எச்சரிக்கையுடனோ அல்லது ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாகவோ அணுக வேண்டும் என 65 சதவீத கனடியர்கள் கூறுகின்றனர்.
