கனடாவிலிருந்து அமெரிக்கத் தூதரை வெளியேற்றக் கோரும் மனு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Calgary நகரைச் சேர்ந்த பெண் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையவழி மனுவில் 29,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்;
அமெரிக்கத் தூதரை ‘விருப்பத்திற்கு அல்லாத நபர்’ (persona non grata) என அறிவித்து, அவரை கனடாவிலிருந்து வெளியேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்த மனு இலையுதிர் காலத்தில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பசுமைக் கட்சியின் தலைவர் Elizabeth May மூலம் இந்த மனு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.
கனடா-அமெரிக்க உறவை சிதைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணான வகையில் கனடிய அரசியல் விவாதங்களில் தலையிட்டதாகவும் Pete Hoekstra மீது அந்த மனு குற்றம் சாட்டுகிறது.
கனடிய விவகாரங்களில் அமெரிக்காவின் இராஜதந்திர ரீதியான தலையீட்டை மறு ஆய்வு செய்யுமாறு நாடாளுமன்றக் குழுவொன்றுக்கு Liberal அரசாங்கம் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனு கூறுகிறது.
கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது என்பது பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆகியோருக்கு இடையிலான ஒரு சிறந்த விவாதப் பொருளாக அமையும் என தெரிவித்ததால் மூலம் Pete Hoekstra செய்திகளில் இடம் பிடித்தார்.
