தேசியம்
செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது வேலையற்றோர் விகிதம்!

கனடாவின் வேலையற்றோர் விகிதம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

July மாதத்தில் கனடாவில் 75,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கபட்டன.

இதன் மூலம் வேலையற்றோர் விகிதம் 6.4 சதவீதமாக குறைந்தது.

April மாதத்திலிருந்து வேலையற்றோர் விகிதம் அரை சதவீதம் குறைந்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக வேலையற்றோர் விகிதம் குறைந்துள்ளதை வெள்ளிக்கிழமை (07) வெளியிடப்பட்ட கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

April மாதத்திலிருந்து கனடாவில் 1,81,000 வேலை வாய்ப்புகளும், ஓராண்டுக்கு முந்தைய நிலையில் இருந்து 1,96,000 வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

July மாதத்தில் ஏற்பட்ட பெரும்பாலான வேலைவாய்ப்பு அதிகரிப்பு, முழுநேர, பகுதிநேரப் பணிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கடந்த மாதத்தில் ஏனைய மாகாணங்களை விட Ontario அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

Chris d’Entremont-க்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து RCMP விசாரணை?

Lankathas Pathmanathan

காட்டுத்தீ புகை தொடர்பாக கனடாவை கண்டிக்கும் Donald Trump?

Lankathas Pathmanathan

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்தது பணவீக்க விகிதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment