தேசியம்
செய்திகள்

Toronto நகரில் வார இறுதியில் Caribbean திருவிழா ….

Toronto நகரை வார இறுதியில் Caribbean திருவிழா ஆக்கிரமிக்கிறது.

Toronto நகரின் மிகப்பெரிய கோடைக்கால நிகழ்வுகளில் ஒன்றிற்காக, வார இறுதியில் வீதித் தடைகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.

Toronto Caribbean  திருவிழாவின் மாபெரும் அணிவகுப்பு  சனிக்கிழமை (01) நடைபெறுகிறது.

இதனால் Exhibition Place, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல வீதிகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த வீதித் தடைகள் சனி நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (02) காலை 6 மணி வரை நீடிக்கும் என Toronto காவல்துறை அறிவித்தது.

இந்தத் திருவிழாவின் காரணமாக போக்குவரத்து தாமதங்கள் ஏற்படக்கூடும் எனக் குடியிருப்பாளர்கள பார்வையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்துகிறது.

இந்தப் பகுதிகளில் பயணங்களை மேற்கொள்பவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அமுலில் உள்ள வீதித் தடைகள் குறித்த முழுமையான பட்டியலுக்கு

https://www.tps.ca/media-centre/news-releases/66545/

Related posts

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment