தேசியம்
செய்திகள்

FIFA போட்டிகளைக் காண வந்த 175 பேர் கனடாவில் அகதி தஞ்சக் கோரிக்கை?

FIFA உலகக் கோப்பைப் போட்டிகளைக் காண வந்த பார்வையாளர்கள் சிலர் கனடாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர்..

கனடாவின் குடியேற்றம், அகதிகள், குடியுரிமை துறை இதை உறுதிப்படுத்தியுள்ளது.

கனடாவிற்கு பயணம் செய்வதற்கு முன்னர் தங்களின் தற்காலிக வதிவிட விண்ணப்பங்களில் “FIFA உலகக் கோப்பை 26” எனக் குறிப்பிட்ட 175 பேர், பின்னர் அகதி புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கனடாவுக்குப் பயணம் செய்து, உலகக் கோப்பை போட்டிகளை காணவே வந்ததாக குறிப்பிட்ட மொத்தம் 26,111 பேரில் இவர்களும் அடங்குவர்.

அகதி தஞ்சம் கோரியவர்கள் Bangladesh, Burundi, Colombia, Ecuador, Egypt, Ghana, Kenya, Nepal, Nigeria, Pakistan, China and Senegal ஆகிய பன்னிரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இந்த அகதி கோரிக்கை விடுத்தவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் Ghana நாட்டைச் சேர்ந்தவர்களாவார்கள்.

25 Ghana நாட்டைச் சேர்ந்தவர்கள், Colombia, Egypt, Kenya ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 15 பேரும் அகதி கோரிக்கை விண்ணப்பித்திருந்தனர்.

கனடா, அமெரிக்கா, Mexico ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய ஐந்து வார கால ஆண்கள் உலகக் கோப்பைப் போட்டிகளின் போது, கனடாவின் Vancouver, Toronto ஆகிய நகரங்களில் 13 ஆட்டங்கள் நடைபெற்றன.

Related posts

September மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்:Ontario தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்!

Gaya Raja

நாடளாவிய ரீதியில் மருத்துவமனைகளில் மீண்டும் அதிகரிப்பை எதிர்கொள்ளும் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பதினொரு பதக்கங்கள் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment