தேசியம்
செய்திகள்

Toronto நகர முன்னாள் முதல்வரின் மனைவி காலமானார்

Toronto நகர முன்னாள் முதல்வரின் மனைவி காலமானார்.

Toronto நகர முன்னாள் முதல்வர் மறைந்த Rob Ford-இன் மனைவி Renata Ford காலமானார்.

அவருக்கு வயது 55 ஆகும்.

அவரது மைத்துனரும் Ontario மாகாண முதல்வருமான Doug Ford-டின் அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அவர்களுக்கு மிகுந்த வேதனைப்படுகிறோம் என குறிப்பிட்ட Doug Ford, மிகவும் கடினமான இந்தக் காலகட்டத்தில், அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என் கோரினார்.

அவரது மரணத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

Ontario Liberal கட்சி முதல்வர் Doug Ford அவரது குடும்பத்திற்கு  தனது இரங்கலை திங்கட்கிழமை (06) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

2019 மத்திய தேர்தலில், Renata Ford கனடாவின் மக்கள் கட்சி – People’s Party of Canada – வேட்பாளராக Etobicoke தொகுதியில் போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Paris Paralympics: பதின்மூன்று பதக்கங்களைக் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

Lankathas Pathmanathan

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அரசுடன் இணைந்து வாக்களிப்பார் : Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment