தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடர்கின்றன

கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடர்வதாக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

ஆனாலும் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணையை ஆரம்பிக்கும் நிலையை அரசாங்கம் இன்னும் அடையவில்லை என Dominic LeBlanc தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து கடந்த வார இறுதியில் எதிர்க்கட்சித் தலைவருடன் உரையாடியதாக கூறிய அமைச்சர், அடுத்த சில நாட்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி குழு தலைவர்களை மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வெற்றி

Gaya Raja

தெற்கு, கிழக்கு Ontarioவைத் தாக்கும் கடுமையான பனிப்புயல்

Lankathas Pathmanathan

பிரதமரால் கனடியர்கள் விரக்தி: NDP தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment