தேசியம்
செய்திகள்

போலி அடையாள அட்டைகளுடன் இருவர் கனேடிய எல்லையில் கைது!

போலி நிரந்தர குடியுரிமை அட்டைகள், சமூக காப்பீட்டு அட்டைகளுடன் கனேடிய எல்லையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த மாத ஆரம்பத்தில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக கனடா எல்லை சேவைகள் முகமையகம் (CBSA) தெரிவித்தது.

அவர்கள் போலி கனேடிய நிரந்தர குடியுரிமை அட்டைகள் (Canadian permanent resident cards), சமூக காப்பீட்டு அட்டைகளுடன் (Social insurance cards), ஆகியவற்றுடன் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கனடா எல்லை சேவைகள் முகமையக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனேடிய எல்லை அதிகாரிகள் இவர்கள் இருவரையும் Quebec மாகாணத்தில் August 1ஆம் திகதி கைது செய்தனர்.

அமெரிக்காவில் இருந்து கனடிய எல்லையை கடக்கும்போது, ​​அவர்களது வாகனத்தில் பல மோசடி அடையாள அட்டைகளுடன் இவர்கள் இருவரையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக CBSA குற்றம் சாட்டியுள்ளது.

போலி அடையாள அட்டைகள் தவிர, இவர்களிடமிருந்து 10 ஆயிரம் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள கனடிய பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

Related posts

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment