Quebec மாகாணத்தின் COVID தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் புதன்கிழமை முதல் ஆரம்பமானது.
தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியிலும் நான்காவது அலை குறித்த அச்சத்தின் மத்தியிலும், மாகாணத்தின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
மாகாணம் முழுவதும் உடற்பயிற்சி நிலையங்கள், உணவகங்கள், விழாக்கள், நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் இந்த கடவுச்சீட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்தத் தடுப்பூசி கடவுச்சீட்டு அத்தியாவசியமற்ற சேவைகளை அணுக மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆனால் சில்லறை கடைகளுக்கு இது தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.