தேசியம்
செய்திகள்

FIFA: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கனடா

கனடா FIFA உலகக் கோப்பை தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  (28) அமெரிக்காவின் Los Angeles நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை கனடா தோற்கடித்தது,

தென் ஆப்பிரிக்காவை 1-0 என்ற goal கணக்கில் வீழ்த்தி கனடா round of 16 சுற்றுக்கு முன்னேறியது.

FIFA தரவரிசையில் கனடா 30-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 60-வது இடத்திலும் இருந்த நிலையில் இத்தொடரில் பங்கேற்றன.

கனடிய அணிக்காக Stephen Eustaquio goal அடித்தார்.

இந்த ஆட்டத்தில் கனடிய அணியின் தலைவர் Alphonso Davies களம் இறங்கினார்.

கனடிய அணியின் நட்சத்திர வீரர் இந்தத் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

அறிவிக்கப்பட்ட 69,237 பார்வையாளர்களில், ஆயிரக்கணக்கான கனடிய இரசிகர்களும் சிவப்பு நிற ஆடை அணிந்து, கனடியக் கொடிகளை அசைத்தவாறு கனடிய வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

Ontario மாகாணத்தை சேர்ந்த 29 வயதுடைய நடுகள வீரர் Stephen Eustaquio அடித்த இறுதி நிமிட goal, கனடிய ஆண்கள் கால்பந்து அணியை வரலாற்றில் முதன்முறையாக FIFA உலகக் கோப்பையின் round of 16  சுற்றுக்கு முன்னேற செய்தது.

இந்த வெற்றியுடன் July 4 அன்று Houston நகரில் நடைபெறும் ஆட்டத்தில் Netherlands, Morocco அணிகளுக்கு இடையிலான round-of-32 சுற்றின் வெற்றியாளரை கனடா எதிர்கொள்ளும்.

Bosnia-Herzegovina அணியை 1-1 என்ற goal கணக்கில் சமன் செய்து கனடிய அணி FIFA தொடரில் தனது முதல் புள்ளியை பெற்றது.

Qatar அணியை  6-0 என்ற goal கணக்கில் படுதோல்வி அடைய செய்து தனது முதல் வெற்றியை கனடா பதிவு செய்து.

தங்கள் குழுச் சுற்றின் கடைசி ஆட்டத்தில் Switzerland அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த போதிலும். முதல் முறையாக knockout  சுற்றுக்கும் கனடா முன்னேறியது.

Related posts

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Lankathas Pathmanathan

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

Lankathas Pathmanathan

முழுமையான முடக்கம்? இன்று (வியாழன்) முதல்வர் Ford அறிவிப்பார்!

Lankathas Pathmanathan

Leave a Comment