தேசியம்
செய்திகள்

Montreal Jazz திருவிழாவில் பங்கேற்ற ஆறு பேர் மருத்துவமனையில்

சாதனை படைத்த Montreal Jazz திருவிழா நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Montreal Jazz திருவிழாவின் இலவச இசை நிகழ்ச்சிக்காக, Jean-Mance -Sainte-Catherine தெருக்கள் சந்திக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் இலட்சக்கணக்கான இசைப்பிரியர்கள் திரண்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2009 விழாவின் பின்னர், ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை எண்ணிக்கையிலான பார்வையாளர்களை தாங்கள் எதிர்கொண்டதில்லை என Jazz Fest  ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேரில் எவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என கூறப்படுகிறது.

Related posts

கனேடிய இராணுவத்திற்கு உதவிய ஆப்கானிய பிரஜைகள் மிகவிரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் : கனேடிய அரசாங்கம்

Gaya Raja

கனடாவில் விரைவில் புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுகள்?

Mississauga-Lakeshore தொகுதியில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment