தேசியம்
செய்திகள்

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்யும் மத்திய அரசு

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்ய கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் பிரதமரின் விமானம் உட்பட ஒன்பது விமானங்களை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதில் ஒன்று பிரதமர், ஆளுநர் நாயகம் உட்பட உயர் பதவியில் உள்ள அரச அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் விமானமாகும்.

இதற்காக ஐரோப்பிய விமானப் போக்குவரத்து நிறுவனமான Airbusசுடன் 3.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

தற்போது கைவசம் உள்ள விமானங்கள் 1992 முதல் உபயோகத்தில் உள்ளன.

அதன் ஆயுட்காலம் 2027அம் ஆண்டில் முடிவடையவுள்ளது.

தொழில்நுட்பம் காரணமாக இதன் பாவனையை  மேலும் நீட்டிப்பது மிகவும் கடினமானது என அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

கனடா இழிவான முறையில் செயல்படுகிறது: சீன அரசாங்கம் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Conservative தலைமைப் போட்டியில் மேலும் இரண்டு வேட்பாளர்கள்!

உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு உதவ கனடா தயார்: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment