தேசியம்
செய்திகள்

அடுத்த ஆட்டத்தில் கனடிய அணியின் தலைவர் களம் இறங்குவார்?

கனடிய உதைப்பந்தாட்ட அணியின் தலைவர் Alphonso Davies, FIFA உலகக் கோப்பை தொடரின் Round of 32 சுற்றில் விளையாடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய உதைப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் Jesse Marsch தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (28) Los Angeles  நகரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற இருக்கும் கனடிய அணியின் போட்டிக்கு முன்னதாக Jesse Marsch சனிக்கிழமை (27) செய்தியாளர்களிடம் பேசினார்.

May மாத ஆரம்பத்தில் தொடை தசை பகுதியில் காயம் ஏற்பட்டதிலிருந்து 25 வயதான நட்சத்திரமான இடதுபுற தடுப்பாட்ட வீரர்  Alphonso Davies களம் இறங்கவில்லை.

June 12 அன்று Toronto-வில் Bosnia-Herzegovina அணிக்கு எதிரான ஆட்டத்துடன் கனடா இந்த FIFA தொடரை ஆரம்பித்தபோது அவர் அணியில் இடம்பெறவில்லை.

ஆனால், June 18 அன்று Vancouver-ரில் Qatar அணிக்கு எதிராக கனடா 6-0 என்ற goal கணக்கில் பெற்ற வெற்றியின் போது அவர் மாற்று வீரராக  இருந்தார்.

கடந்த புதன்கிழமை (24) Vancouver நகரில் Switzerland அணிக்கு எதிராக நடைபெற்ற குழுச் சுற்றுக்கான இறுதி ஆட்டத்தில் Alphonso Davies களம் இறங்குவார் என ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாக Jesse Marsch கூறினார்.

கனடாவின் ஆண்கள் கால்பந்து அணி வரலாற்றில் முதன்முறையாக FIFA உலகக் கோப்பையின் knockout சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இதில் Round of 32 சுற்றில் Alphonso Davies களம் இறங்குவது கனடிய அணிக்கு மிகப்பெரிய சாதகமான விடயமாக நோக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இதுவே முதல் உலகக் கோப்பை வெளியேற்றப் போட்டியாகும் (elimination game ) என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்கள்

Lankathas Pathmanathan

கனடா தொற்று எண்ணிக்கையில் ஒற்றை நாள் சாதனையை வியாழக்கிழமை பதிவு செய்தது

Gaya Raja

Leave a Comment